அந்தமானில் ராணுவ வீரர்களுடன் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தீபாவளி கொண்டாட்டம்

ekuruvi-aiya8-X3

Sitharaman-celebrates-Diwali-with-troops-in-Andamanவட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அந்தமானில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார். நேற்று அந்தமான் வந்தடைந்த அவருக்கு ராணுவம் தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் லெஃப்டினண்ட் கவர்னரான முன்னாள் கடற்படை தளபதி டி.கே.ஜோஷி மற்றும் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா ஆகியோர் அவரை வரவேற்றனர்.
நேற்று அந்தமானில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து அவரிடன் அதிகாரிகள் விளக்கினர். பின்னர் அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, அந்தமானின் பிரிச்கஞ்சில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றிவரும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். பின்னர் அங்கு 2004-ம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Share This Post

Post Comment