மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்திய அமெரிக்க வாழ் தமிழர்கள்

Facebook Cover V02

tamil-orgin-americans-protest-for-student-anitha-deathநீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்திய அமெரிக்க வாழ் தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் இலங்கை பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனிதா தற்கொலை சம்பவம் அமெரிக்காவில் உள்ள தமிழர்களையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

நியூஜெர்சி, மிக்சிகன், அட்லாண்டா, கலிபோர்னியா, சிகாகோ, புளோரிடா உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் தமிழர்கள், அனிதா மரணத்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். மேலும் அனிதா சாவுக்கு நீதி கேட்டு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு கையெழுத்து பெற்றனர். இதேபோல் பல்வேறு நகரங்களில் வாழும் தமிழர்களிடம் கையெழுத்து பெற்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் அளிக்க உள்ளதாகவும், அடுத்தகட்டமாக இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் அமெரிக்க வாழ் தமிழர்கள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment