தெலுங்கிலும் அமோக வரவேற்பு பெற்ற அனிருத்

ekuruvi-aiya8-X3

Anirudh-Most-welcome-in-Telugu-tooஅனிருத் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் முன்னணி இசை அமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள அனிருத்துக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன.

இப்போது பவன் கல்யாண்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் இந்த படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஒரு பாடல் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது.

‘பைட்டி கொச்சி சூஸ்தே…’ என்ற அந்த பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானவர்கள் இந்த பாடலை கேட்டு ரசித்து இருக்கிறார்கள். பாடல் ஹிட் ஆகி உள்ளது.

இதனால் தெலுங்கிலும் அனிருத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதுவரை தமிழ் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த அனிருத்துக்கு தெலுங்கில் வெளியான முதல் அறிமுக பாடலே ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறது. அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.

Share This Post

Post Comment