அனாதை இல்லத்துக்கு பொதி மூலம் குழந்தையை அனுப்ப முயன்ற பெண்!

ekuruvi-aiya8-X3

Mother-nabbed-after-trying-to-courierசீனாவில் பிறந்த பச்சிளங் குழந்தையை உயிருடன் கூரியர் பார்சலில் அனாதை இல்லத்துக்கு அனுப்ப முயன்ற தாயை காவல் துறை கைது செய்தனர்.

கூரியர் பொதி மூலம் தபால்கள், துணி மணிகள் மற்றும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால் பிறந்த பச்சிளங் குழந்தையை உயிருடன் கூரியர் பொதியில் ஒரு பெண் அனுப்ப முயன்றார்.

ஈவு இரக்கமற்ற மனிதாபிமானமற்ற கொடூர சம்பவம் சீனாவில் நடந்தது. 24 வயது பெண் தனக்கு பிறந்த பச்சிளங் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் வைத்தாள். அதை பல பிளாஸ்டிக் பைகளால் பண்டலாக சுற்றினார்.

பின்னர் அதை கூரியர் அலுவலகம் சென்று ஒரு அனாதை இல்லத்துக்கு அனுப்பும்படி கூறினார். பார்சலில் உணவு பொருள் இருப்பதாக தெரிவித்தார். அதை கையில் வாங்கிய ஊழியர் பார்சலுக்குள் இருக்கும் பொருள் அசைவதையும், குழந்தையின் அழுகுரலையும் கேட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த பார்சலை பிரித்து பார்த்தார். உள்ளே கை, கால்களை அசைத்தபடி பச்சிளங் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை மீட்ட அவர் அப்பெண் மீது காவல் துறையில் புகார் செய்தார். குழந்தையை அனாதையாக்குவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். அக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். எனவே குழந்தையை அனாதை விடுதிக்கு அனுப்பிய இளம் பெண் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் குழந்தை அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Share This Post

Post Comment