அனர்த்த நிலைமகள் குறித்து பேசும் நோக்கில் நாளை விசேட பாராளுமன்ற அமர்வு

ekuruvi-aiya8-X3

parlimentநாட்டின் அனர்த்த நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் நாளைய தினம் விசேட பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் இந்த விசேட பாராளுமன்ற அமர்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் கூட்டுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி நாளை பிற்பகல் 1.00 மணியளவில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய 14ம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் பாராளுமன்றை கூட்ட உள்ளார்.

Share This Post

Post Comment