வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம்!

ekuruvi-aiya8-X3

nuraichcholaiவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் கொண்டு செல்லும் பாதையில் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக 1830 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பே 2 அலகுகளில் 1200 மெகாவாட் மின்சார மெகாவாட்டானது கொதிகலன் பழுது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று நிலவரப்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் பாதைகள் மூலமாக துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படும். இந்த சூழ்நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின்சாரமும் தண்டையார்பேட்டை, கீழ்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

நேற்று இரவு திடீரென இந்த மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக வடசென்னை பகுதிகளில் பரவலாக 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.

Share This Post

Post Comment