அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா, சீனாவைக் கவனிக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ekuruvi-aiya8-X3

Usa_flag-400-seithyஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீதமான உரிமை சீனாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளமை தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அண்மையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கும் என அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாம் இதனை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்போம், இது நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என அமெரிக்க உயரதிகாரியொருவர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மூலோபாயக் கரிசனைகளை சிறீலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமசிங்க எதிர்த்துள்ளதுடன், இது வர்த்தக நோக்கம் கொண்டது எனவும், இதில் எந்தப் பிரச்சனையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment