அம்மாவைப் பார்த்தீங்களான்னு கேட்காதீங்க! – வேதனையுடன் அற்புதம்மாள்

ekuruvi-aiya8-X3

atputhammaதமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.

மருத்துவமனை நிலவரத்தை தம்பித்துரை விவரித்தார். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும்’ எனக் கலங்குகிறார் அவர்.

அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை முதல்வரின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்கச் சென்றார் அற்புதம்மாள்.

அவரை மருத்துவமனைக்குள் செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. ‘ நான் வந்திருக்கேன்னு அமைச்சர்கள் யாரிடமாவது சொல்லுங்கள். திருப்பி அனுப்ப மாட்டார்கள்’ என வலியுறுத்தினார்.

இந்தத் தகவல் இரண்டாவது தளத்தில் இருந்த தம்பித்துரையின் கவனத்துக்குப் போக, நேரடியாக அற்புதம் அம்மாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

இதன் பின்னர் நடந்ததை நம்மிடம் விவரித்தார். ” தம்பித்துரையும் விஜயபாஸ்கரும் என்னை வரவேற்று இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை விவரித்தார் தம்பித்துரை. அவர் என்னிடம், ‘ முதல்வருக்கு திரவ உணவுகள் வழங்கப்படுகிறது. கடுமையான நோய்த் தொற்றின் காரணமாகத்தான் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

இன்னும் சில நாட்கள் முதல்வர் மருத்துவமனையில் தங்கி இருப்பார். விரைவில் குணமடைந்து வருவார்’ என்றார்.

நானும், ‘ அதுதான்பா எங்களுக்கு வேணும். என்னை மாதிரியே கோடிக்கணக்கான தாய்மார்கள் அம்மா சீக்கிரம் குணமடைந்து வரனும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்கன்னு சொன்னேன்.

அவரும் ஆறுதலாகப் பேசினார். ‘ என் மகனுக்கு பரோல் விடுப்பு வேண்டும் என்று கார்டனில் மனு கொடுத்துவிட்டு வந்த சில நாளில் முதல்வருக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது.

மிகுந்த வேதனையாக இருக்கிறது. ‘ முதல்வருக்காக பிரார்த்திப்பீர்களா?’ என்று ஒருவர் கேட்டார்.

பிரார்த்தனை செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது முதல்வருக்குத் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் அவருக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் நலம்பெற்றுத் திரும்ப வேண்டும் என மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாது.

இனிமேலும் முதல்வரை நேரில் பார்த்தீர்களா என்று யாரும் கேட்க வேண்டாம்.

நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், யாரையும் சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அதுதான் அப்போலோவில் நடக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே, எனக்கும் உடல்நலமில்லாமல் போய்விட்டது.

முதல்வர் விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்றார் வேதனை கலந்த குரலில்.

Share This Post

Post Comment