இன்று 75-வது பிறந்தநாள்: அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

Thermo-Care-Heating

Amitabh-Bachchanஇந்தி திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக அசைக்க முடியாத உச்சநட்சத்திர அந்தஸ்துடன் சூப்பர் ஸ்டாராக நிலைத்திருக்கும் அமிதாப் பச்சன் தனது குடும்பத்தாருடன் மொரீசியஸ் தீவுக்கு சென்றுள்ளார்.

சினிமாவில் நடிப்பதுடன், இந்தியாவின் மிகப்பெரிய திரைத்துறை பிரபலம் என்ற வகையில் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம், காசநோய்க்கு எதிரான பிரசாரம், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா பிரசாரம் ஆகியவற்றையும் அவர் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமிதாப் பச்சனின் 75-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘திரையுலக ஆளுமையும், சமூகச் சேவை மற்றும் தேச கட்டமைப்பு திட்டங்களில் தீவிர பற்று கொண்டவருமான அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

‘அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!, அவரது திரைத்துறை பங்களிப்பு மற்றும் சமூக சேவைக்கான பங்களிப்பால் இந்தியா பெருமை கொள்கிறது’ என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment