வேம்படி பகுதியில் பெய்த அமிலமழையால் பாதிப்பு

ekuruvi-aiya8-X3

jaffna-Lயாழ் வேம்படி மகளிர் கல்லூரி பகுதியில் நேற்று திடீரென பெய்த அமில மழையால் 16 மாணவிகளும் ஒரு ஆசிரியரும் உபாதைக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த சம்பவும் தொடர்பில் பாடசாலை அதிபர் வி.சண்முகரட்ணம் தெரிவிக்கையில்…

பாடசாலை மாணவிகளுக்கு வழமையாக காலையில் 7.30 மணியில் இருந்து 7.50 மணிவரை பிரார்த்தனை நடைபெறும்.

இந்த பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தீடீரேன செம்மஞ்சள் நிறத்தில் அமில மழை பெய்தது.

கடந்த 19 ஆம் திகதியும் இவ்வாறான மழை பெய்தது. அதில் சில மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் உடலிலும் சீருடையிலும் கரை படிந்து காணப்பட்டது. கை மற்றும் தேளில் தளும்பு போன்ற தடயங்கள் காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் ஒவ்வாமை காரணமாக சத்தி எடுத்தார். பாதிக்கப்பட்டவர்களை யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற மாணவிகள் அனைவருக்கும் அவர்களுடைய பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு வந்து விசாரணை செய்துள்ளனர்.

Share This Post

Post Comment