அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது

Facebook Cover V02

jalia-vikramasuriyaஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கி சகாவுமான ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஜாலியவை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்து பல மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். தூதுவராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஜாலியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எவ்வித அறிவிப்பினையும் வழங்காது ஜாலிய நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment