அமெரிக்க குடியரசுக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்பு

ekuruvi-aiya8-X3

அமெ­ரிக்க குடியரசு கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்பால் தெரி­விக்­கப்­பட்டு வரும் சர்ச்­சைக்­கு­ரிய விமர்­ச­னங்­களால் அவ­ரது கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் கருத்­து­க­ளுக்கு அவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தனது தேர்தல் பிர­சார நட­வ­டிக்கை எது­வித இடை­யூறும் இல்­லாது சிறப்­பாக இடம்­பெற்று வரு­வ­தாக அவர் கூறினார்.

ஈராக்­கிய போரில் உயி­ரி­ழந்த அமெ­ரிக்க முஸ்லிம் படை­வீ­ரரின் பெற்­றோ­ருக்கு எதி­ராக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களால் அவ­ரது கட்­சி­யி­ன­ரி­டையே அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வதா இல்­லையா என்­பது தொடர்பில் பிளவு நில­வு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்­நி­லையில் மேற்­படி செய்­திகள் தவ­றா­னவை எனவும் தனது பிர­சார நட­வ­டிக்கை எது­வித இடை­யூறும் இன்றி நன்­றாக இடம்­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அது ஹிலாரி கிளின்­டனின் ஆத­ரவு ஊட­கங்­களால் பரப்­பப்­படும் போலி­யான பிர­சாரம் எனவும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

முன்­னணி அர­சி­யல்­வா­தி­யான றிச்சர்ட் ஹன்னா உள்­ள­டங்­க­லாக குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த 3 முக்­கிய உறுப்­பி­னர்கள், தாம் எதிர்­வரும் தேர்­தலில் ஜன­நா­யக கட்சி வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளின்­ட­னுக்கே வாக்களிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு பொருத்தமற்ற ஒருவர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்

Share This Post

Post Comment