இலங்கையில் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்து

Facebook Cover V02

Usa_flag-400-seithyஇலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல்வதைக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் அண்மைக் காலத்தில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை குறித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புச் சேவைகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது. சித்திரவதைகள், வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் உலகில் எங்கு நடந்தாலும், அதனை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யும் இலங்கை அரசின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பான அனைவரையும்; தாமதமின்றி, பொறுப்புக் கூற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share This Post

Post Comment