பொலிசில் ஆஜராகுமாறு நடிகை அமலா பாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Thermo-Care-Heating

amalaநடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியல் பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவில் வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக, அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிஸ் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் அமலாபால். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம். முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு பொலிஸ் முன்பு வருகிற 15ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இதனால் அமலாபால் 15ந் தேதி பொலிஸ் முன் ஆஜராவது உறுதியாகி இருக்கிறது.

ideal-image

Share This Post

Post Comment