ஜனாதிபதி அலுவலர்கள் நாள் சம்பளத்தை நிவாரணப்பணிக்கா ஒதுக்க முன்வருக!

ekuruvi-aiya8-X3

presiiiiசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்பொருட்டு ஜனாதிபதி அலுவலகத்தினதும் அதன் நிர்வாகத்துக்குட்பட்ட நிறுவனங்களினதும் ஊழியர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை நிவாரணப்பணிக்காக வழங்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் வெசாக் பண்டிகைக்காக ஜனாதிபதி அலுவலகமும் அதன் நிர்வாகத்திற்குட்பட நிறுவனங்களும் இணைந்து வெசாக் பக்திப்பாடல் இறுவட்டு வெளியிடுதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு நிதிஒதுக்கியிருந்தனர். தற்போது இவற்றை இரத்துச் செய்துவிட்டு இந்நிதியினை காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள நிதியினைக் கையாள்வதற்காக நிதியம் ஒன்றினை உருவாக்குமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களின் தற்போதைய தேவைகள், வெள்ளம் வடிந்த பின்னர் துப்பரவுப் பணிக்கான செலவுகள், சுகாதாரப் பணிக்கான செலவுகள், சுத்தமான குடிநீர்த் தேவைகள் போன்றவற்றுக்கு இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உலர் உணவுகளை வழங்குவதில் ஜனாதிபதி மாளிகைப் பணிக் குழாம் உறுப்பினர்கள் குழுவாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இதேவேளை நிவாரணங்கள் போதியதாக இல்லாதிருப்பின் எந்தவொரு தொலைபேசி மூலமும் 1919 இலக்கத்தைத் தொடர்பு கொண்டு அதுபற்றி அறியத் தருமாறு ஜனாதிபதி அலுவலகம்

Share This Post

Post Comment