மக்கள் தொடர்பாடல் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் விக்கி!

ekuruvi-aiya8-X3

19198567_10207536921575879_144997423_nதற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில நாட்களுக்குள் உடனடியாக அமைக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தான் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்றும் இது மக்களுனனான தனது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

20 பேர்கொண்ட வடக்கு மாகாண மருத்துவர்கள் இன்று நண்பகல் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர். அதன்போது முதலமைச்சருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு தாம் உறுதுணையாக இருப்பதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். அதன்போது மருத்துவர்களுக்கு முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அச்சந்திப்பில் மேலும் தெரிவித்த முதலமைச்சர்,

தனது கோரிக்கைக்கு சாதகமான முடிவு ஏற்படாதவரை தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அந் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் இன்னமும் அமைச்சர்களிற்கு எதிரான ஆதார பூரவமான முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் முதல்வர் மக்கள் தனக்குப் பின்னால் இருக்கும்வரை தனக்கு எதிரான எந்தச் செயற்பாட்டிற்கும் தான் அஞ்சப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருடனான சந்திப்பின் பின் எமக்கு கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள் முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகள் இறுக்கமடைந்து அவரை பதவிநீக்கம் செய்யும் நிலை உருவானால் அதற்கு எதிரான அவசர நடவடிக்கைகள் குறித்து தாம் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment