அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக லெசில் டி சில்வா ஆணைக்குழுவிலிருந்து நீக்கபட்டார்

ekuruvi-aiya8-X3

presidentilaஅமைச்சர்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக லெசில் டி சில்வா கடமையாற்றி வந்தார்.

இரண்டு அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு லெசில் டி சில்வா பணி நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லெசில் டி சில்வா நீக்கப்படாவிட்டால் தாம் பதவி விலகப் போவதாக இரண்டு அமைச்சர்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு சிறுபான்மை கட்சிகளின் அமைச்சர்களே இவ்வாறு அழுத்தம் பிரயோகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு அமைச்சர்கள் கோரிய போதிலும் லெசில் டி சில்வா தொடர்ச்சியாக விசாரணை நடத்தியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பதவிக் காலம் பூர்த்தியான காரணத்தினால் லெசில் டி சில்வா பதவி விலகியதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment