சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது – மஹிந்த

Thermo-Care-Heating

mahintha12333

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும், சுதந்திரக் கட்சியை பாதுகாக்கவோ அல்லது கட்சியின் கொள்கைகளை முன்னெடுக்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கவில்லை எனவும் அவர்

மிகத்தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும், மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கட்சிக்கு நன்மை செய்வார் என எதிர்பார்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதா அல்லது கட்சியின் நலனுக்காக தொடர்ந்து செயற்படுவதா என்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment