55 நாட்களையும் தாண்டித் தொடரும் அக்கரை மக்களின் போராட்டம்

Thermo-Care-Heating

02-2அக்கரை கடற்கரையில் இருக்கும் சுற்றுலா மையத்தை அகற்றி அதைச் சிறுவர் விளையாட்டுத் திடலாக மாற்றம் செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம், உணவுத் தவிர்ப்புப் போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் 55 நாட்களைக் கடந்து தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்கள் கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி வடக்கு மாகாண சபைக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதுவரை அம் மக்களின் போராட்டத்திற்கு வலி கிழக்குப் பிரதேச சபையினராலோ, வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சராலோ எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தமது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுனர் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டதோடு பொலிஸ் காவலரண் அமைத்தல் உட்படப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாகவும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமை பெருத்த ஏமாற்றத்தை அழிப்பதாகப் போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் மழை, வெள்ளமு, காற்று ஆகியவற்றக்கு மத்தியில் விரக்தியின் விழிம்பில் நின்று போராடும் மக்கள் தமக்குச் சரியானதொரு தீர்வு கிடைக்கும் வரை தாம் இப்போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியுடன் தெரிவிக்கின்றார்கள்.

ideal-image

Share This Post

Post Comment