அரசியல் பிரச்சினைகளால் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை

ekuruvi-aiya8-X3

akila-virajஅரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் கடந்த காலத்தில் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த சமுர்த்தி பெறுநர்களுக்கு அவற்றை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குருணாகல, ஹிரியால பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சி எதிர்நோக்கும் நெருக்கடி, பிரச்சினைகள் மற்றும் பிளவுகளை முற்றாக இல்லது செய்து, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment