“ஏகாதிபத்திய ஆடுபுலி ஆட்டம் சின்னாபின்னமான சிரியா“

ekuruvi-aiya8-X3

“எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லை. ஒரு வேளை உணவையேனும் தாருங்கள். தினமும் இங்கு செல் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாட்களுக்கு? நாங்கள் எங்கள் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் கேட்கின்றோம்.  அரபு நாடுகளின் கரிசனை எமக்கு அவசியமில்லை“ என சிரிய பெண் ஒருவர் கண்ணீருடன் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தயங்களிலும் வெகுஜன ஊடகங்களிலும் சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்திருந்தது. ஆம் சிரியாவில் தொடரும்  மோதல்களால் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 700ற்கும்  மேற்பட்ட பொது மக்கள் கொல்ப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழுந்தைகளும் பெண்களும் என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுவரை 465,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 10 இலட்சம் மக்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 6 மில்லயன் மக்கள் உள்நாட்டில் இடம்பபெயர்ந்துள்ளனர்.  5 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளயுறியுள்ளனர்.

akatyhsdsஇன்றைய தினத்தில் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தி சிரிய மோதல் தொடர்பிலலேயே அதிகமாக காணப்படுகின்றன. அந்த நாட்டில் அரசு தரப்பிற்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் பெருமதிமிக்க மனித உயிர்களை பாகுபாடின்றி பலியெடுத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த 7 (2011) வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று ஒரு மார்ச் மாதத்தில் ஆரம்பமான மோதல்கள் இன்று உக்கிரமடைந்துள்ளன. ஒரு தசாப்தத்தை நெருங்கும் இந்த  மோதலகளால் இதுவரை 465,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 10 இலட்சம் மக்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 6 மில்லயன் மக்கள் உள்நாட்டில் இடம்பபெயர்ந்துள்ளனர்.  5 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளயுறியுள்ளனர். இத்தனைப் பெரிய அழிவுகளுக்கு பின்னரும் ஓய்ந்த பாடில்லை துப்பாக்கிச் சத்தங்களும், பீரங்கித் தாக்குதல்களும்.

சிரிய மோதலுக்கு காரணம் என்ன?

ekuruvi-nifgt_gif-1சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்க அங்கு நடைபெறும் குடும்ப ஆட்சியே முக்கிய காரணமென பொதுவாக் கூறப்படுகின்றது. கடந்த 2011ஆம் சிறிதாக ஆரம்பமான மோதல்கள் 2012இல் உக்கிர நிலையை அடைந்தது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னர் 1970 களில் அங்கு ஒற்றை ஆட்சி முறை அமுலானது.  ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். ஏனைய எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டன.  அவரது ஆட்சி முறைமை கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போலவே காணப்படவே எதிர்ப்புகள் வலுப்றெ ஆரம்பித்தன.   ஜனாதிபதி ஷியா பிரிவை சேர்ந்தவர் எனினும் நாட்டின் குடித்தொகையில் 90 சதவிகித மக்கள் சுன்னி இனத்தைச் சேர்ந்தவர்கள். இதுவே முரண்பாடுகளுக்கு முக்கிய காரணியாக அமைந்ததென்றால் அது மிகையல்ல. அரசின் முக்கிய பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் சுன்னி மக்கள் இருந்தார்கள். 2000ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசாத் காலமாகவே,  30 வருடங்களாக நடைபெற்ற நடைபெற்ற தந்தையின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு அதன் பின்னர் கடந்த 18 வருடங்களாக ஆட்சி செய்து வரும் ஹபீசின் புதல்வர் பஷார் பெரும் தலையிடியாக மாறினார். கடந்த 48 வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம், வைத்திய வசதிகள் இன்மை, உணவு பற்றாக்குறை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறியது. இதற்கு எதிராகவே மோதல்கள் ஆரம்பித்தன. சிரியாவில் உள்ள எண்ணெய் வளத்தை சுரண்ட எத்தனிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஜனாதிபதிக்கு எதிராகவும் அந்த நாட்டில் யெற்படும் தீவிரவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாகவும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் போராளி குழுக்களுக்கு எதிராகவும் செயற்படுகின்றன. இந்த சூழலில் யுத்த்ததை முடிக்கு கொண்டுவர எவரும் எத்தனித்ததாக தெரியவில்லை.

சிரிய மோதல்களுக்கு குடும்ப ஆட்சி மாத்திரம்தான் காரணமா?

பல்வேறு காரணங்களுக்காக சிரியாவில் உள்நாட்டுப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கடந்த அரை நூற்றாண்டாக ஜனநாயக உரிமைகளுக்காக அரசுக்கு எதிரானவர்கள் போராடி வருகின்றனர். சுயநிர்ணய உரிமைகள் வேண்டி  சிரியாவில் வாழும் குர்து இன மக்களும் போராடிக்கொண்டிருந்தனர்.  அமைதியாக நடந்துகொண்டிருந்த சிரிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையைக் கலப்பதன்மூலம், உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரக்க ஏகாதிபத்தியம் தீர்மானித்த்து என்பதே வெளிப்படான உண்மை. அதன்காரணமாகவே, திடீரென வன்முறையும் ஆயுதங்களும் துப்பாக்கிச்சூடுகளும் அமைதிப் போராட்டங்களில் வெடித்தன. பின்னாளில், அவற்றை நிகழ்த்தியது, அரசாங்கமோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராகப் போராடியவர்களோ அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்னரே பிரச்சினை பலமடங்கு மோசமாகிப்போனது.

அமெரிக்காவின் சுயநலம், அதற்கு எதிராக செயற்படும் ரஷ்யாவின் இராஜதந்திரம் இந்த இருநாடுகளுக்கும் ஆதரவாக வால்பிடிக்கும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் சிரியாவின் அடையாளம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சராசரியாக ஒருநாளைக்கு 225 பேர் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலகில் அதிகமான அகதிகளை உருவாக்கியுள்ள நாடாக மாறியுள்ளது சிரியா.

தற்காலிக யுத்த நிறுத்தத்தின் தோல்வி

இந்தநிலையில் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நாளொன்றுக்கு ஐந்து மணித்தியால போர் நிறுத்தத்தை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்தது. எனினும் அரச படைகள் யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறி செயற்படுவதாக கிளர்ச்சிக் குழு குற்றம்சாட்டியிருந்தது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் ஆரம்பித்தன. குறிப்பாக மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் கிழக்கு கூட்டாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கேணும், வைத்திய உதவிகளை வழங்குவதற்கேணும் முடியாமல்போனதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பணியாளரகள் தெரிவித்திருந்தனர். எனினும் இந்த நிலைமைக்கு அரசுக்கு எதிரான கிளர்சிக் குழுக்களே காரணமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கடந்த புதன்கிழமை (28-02-2018) அறிவித்திருந்தார்.

ஆடுபுலி ஆட்டம்

சிரிய அரசாங்கத்திற்கு எதிரான பேராட்டங்கள், தாக்குதல்கள் அதிகரிக்கவே ஏற்கனவே 50 ஆண்டுகளாக ரஷ்ய சார்பு நாடாக இருந்த சிரியாவிற்காக களமிறங்கியது ரஷ்யப் படை. 2015 செப்டெம்பரில் ரஷ்யப்படை சிரியாவில் தாக்குதலைத் தொடங்கியது  தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்குள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவிற்கு இழப்பு ஏற்படுவதை உணர்ந்த அப்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமா ரஷ்யாவோடு சமாதானத்திற்கு வந்து சிரியாவிலிருந்து இருநாடுகளும் வெளியேறுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பின் ரஷ்யா 90% படையினரையும், அமெரிக்கா 75% படையினரையும் வெளியேற்றியது. எனினும் கடந்த வருடம் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் உடன்படிக்கைகளை மீறி மீண்டும் சிரியாவில் தாக்குதலைத் தொடுத்தார். ரஷ்யாவும் மீண்டும் அரசுக்கு ஆதரவாக களமிறங்கியது

அந்த ஏகாதிபத்திய ஆடுபுலி ஆட்டத்தில் இப்போது மிச்சம்மீதி கைவசமுள்ள இடங்களிலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களும், தீவிரவாதிகளும் சிரிய மற்றும் சிரிய சார்பு ரஷ்ய இராணுவத்தோடு மோதிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி உயிர்கள் தினம் தினம் காவுகொள்ளபபடுகின்ற. அமெரிக்க இரகசியமாகவும் வெளிப்படையாகவும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் வேட்டை

எண்ணெய்வள நாடுகளில் சுன்னி பிரிவினர் ஆளும் நாடுகள் முழுவதும் அமெரிக்காவின் பின்னால் செல்வதும் ஷியா பிரிவினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஈரான், சிரியா, ஏமன் நாடுகள் ரஷ்ய, சீன ஆதரவு நாடுகளாக இருப்பதும் வெளிப்படையான உண்மை. இந்த சூழ்நிலையில் மத அடிப்படைவாதம் மற்றும் மதப்பற்றில் மூழ்கிப்போன முஸ்லிம்களை சுன்னி, ஷியா பிரிவாக பிரித்து பிரிவினையை வளர்த்தது தீ மூட்டி குளிர்காய்கின்றன ஏகாதிபத்தியங்கள். அதற்கு துணைப்போகும் சர்வதேசம் தினம் தினம் அப்பாவி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் பலியாவதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. லிபியாா, ஈராக், லெபனான் என மத்திய கிழக்கில் தொடர் வேட்டையாடி வந்த அமெரிக்கா தற்போது சிரியாவிலும் வேட்டையை செவ்வனே ஆடி வருகிறது என்றால் அது மிகையல்ல!

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் பார்த்திபன் அவர்களால் எழுதப்பட்டது

 

Share This Post

Post Comment