லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து 17 பேர் பலி!

finalthemo

libya-1லிபியா கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

லிபியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இவர்கள் படகுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு புறப்பட்ட படகு ஒன்று, லிபிய கடற்கரை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இருப்பினும் இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மேலும் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share This Post

Post Comment