இந்து தர்மத்தை உணர்ந்த விஜயாராமன் தமிழறிவும் சமய அறிவும் நிறைந்தவர்-- வேதாந்த நிறுவன சுவாமி பரமாத்மானந்தா
Apr 22 2012 06:12:36

உயிர் சக்தியை இந்து மதம் ஆன்மா என சுட்டுகின்றது. அது அருட்சக்தியாக எங்குமே வியாபித்திருக்கிறது. அதனை Electro Magnetic Energy என விஞ்ஞானம் கூறுகின்றது. எமக்கு வேண்டிய சக்தியைத் தருவது சூரியன். மனிதன் ஞானத்தை அடைய சக்தி உலகெங்கும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஞான தியானங்களை அழிக்கும் சக்தி சூரியனுக்கு உண்டு. நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்வேன்? என்பவற்றை அறிவதே ஞானம். தத்என்பது அது. துஎன்பது நீ. இரண்டும் இணைந்ததே தத்துவம். ஞானம் பழைய நிலையிலேயே இருந்தால் எதுவித பலனும் ஏற்படாது. அதற்கு அகமாற்றம் தேவை. அகமாற்றம் ஏற்பட்டு விட்டால் ஞானம் பெறுவதை தவிர்க்க முடியாது. அக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே எனது முதலாவது சிஷ்யையான திருமதி விஜயா ராமன் அகமாற்றம் தேவைஎன்ற நூலினை எழுதி வெளியிடுகின்றார். அவர் தமிழறிவும்> சமய அறிவும் நிறைந்தவர்”;.

நேற்று மாலை ஸ்காபுறோ சென்ரனியல் றிகிறியேசன் சென்ரர்மண்டபத்தில் நிகழ்ந்த திருமதி விஜயா ராமனின் அகமாற்றம் தேவைஎன்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிய கனடா யோக வேதாந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமி பரமாத்மானந்தா இவ்வாறு கூறினார். சோமாஸ்கந்த சிவாச்சாரியார் விழாவிற்கு சமூகமளிக்க முடியாமற் போனதினால் அவரது ஆசிச் செய்தி வாசிக்கப்பட்டது.

விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் தலைமை உரை நிகழ்த்திய போது ஆன்மீகம் என்றால் ஆண்டவனை துதிப்பது மாத்திரமல்ல ஓர் ஆன்மா மற்றொரு ஆன்மாவை நேசிப்பதும் ஆகும். அந்த ஆன்ம நேயம் பின்னர் மனித நேயமாக மாற்றமடையும். நான் உன்னையும் உலகையும் நேசிக்கின்றேன் என்ற அடிப்படையில் திருமதி விஜயா ராமன் இந்நூலை எழுதியுள்ளார். அவர் வாழ்க்கையின் முக்கிய அம்சமான நின்மதியைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். குற்றமற்ற மனமே மகிழ்ச்சியானது. ஆரோக்கியமாகவும் நின்மதியாகவும் வாழ்வ தற்கு மனதைப் பக்குவப் படுத்துவது எப்படி? அதுவே அகமாற்றம் என விளக்கியுள் ளார் உலகை நேசிக்கும் பண்புள்ள இவர் இது போன்ற மற்றும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். எளிய நடையில் எழுதும் ஆற்றல் மிக்க இவரது இந்நூலை அனைவரும் வாசித்து பயனடைய வேண்டும்எனக் குறிப்பிட்டார்.

நூலுக்கு ஆய்வுரை வழங்கிய திருமதி புவனா கணேஷ் இந்நூலின் அட்டைப் படத் தில் தாமரை மொட்டு இருக்கின்றது. இந்நூலினை விரித்துப் படித்தால் மனமானது தாமரை மலர் போன்று மலரும் என்ற அர்த்தத்தினை அது புலப்படுத்துகின்றது. நாம் ஒவ்வொருவரும் அன்புடன் பழகும் போது உலகமே அன்பு மயமாகி விடுகின்றது. நாமனைவரும் அறியாமையினால் போலியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். கணவன்> பிள்ளைகள் யாவும் நமது பூர்வ கர்மத்தினால் வந்தது. ஆனால் ஞானத்தினால் கர்ம வினைகளை அழிக்க முடியும் என விளக்கமாக திருமதி விஜயா ராமன் எழுதியுள்ளார். கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். ஜோசியரைத் தேடிச் சென்று பரிகாரம் தேடுவதைக் கைவிட்டு உண்மையான ஞான த்தைப் பெற வேண்டும் எனவும் எழுதியுள்ளார். நாம் குழப்பத்தில் இருக்கும் போது மனதுக்கு சாந்தத்தினை ஏற்படுத்தும் நூல்களை படிக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் இன்பத்தை ஏற்படுத்தும் நூலாக அமைந்துள்ளதுஎனக் கூறினார்.

திருமதி கோதை அமுதனும் ஆய்வுரை வழங்கினார். நூலின் முதற் பிரதியை திரு மதி யோகாம்பாளிடம் இருந்து திருமதி சுசிலா ஹரிகரன் பெற்றுக் கொண்டார். செல் விகளான சுவர்னா> மதுரா ஆனந்தராசா ஆகியோர் கர்நாடக பாடல்களைப் பாடினார்கள்.

 

 

 
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >

Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்

Read More >

Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்

Read More >