சலாவ ஆயுதக் கிடங்கில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருந்ததெனவும் ஒரு தகவல்!

Thermo-Care-Heating

download-93விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்ப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள் இரண்டு கிழமைக்கு முன்னர் காணாமல் போயிருப்பதாக அரச தரப்புச் செய்திகள் வெளியாகின.

குறித்த ஆயுதங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புக்கு விற்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாயுதங்கள் அனைத்தும் அவன்கார்ட் கப்பல் மூலமே விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் சலாவ ஆயுதக் களஞ்சியத்திற்கு விசாரணையாளர்கள் சென்று ஆய்வு நடாத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அப்படி, ஆய்வின்மூலம் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைக் கைதுசெய்வது தவிர்க்கமுடியாததாகவிடும்.

எனவே, இச்சம்பவங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கு முன்னர் ஆயுதக்கிடங்கு சாம்பலாகிவிட்டது.

இதில் 1000கோடி பெறுமதியான வெடிபொருட்கள் எரிந்து சாம்பலாயின.

இராணுவத்தினரின் முக்கிய அறிக்கைகள் எரிந்து சாம்பலாயின. அத்துடன் இரகசிய ஆவணங்கள் சிலவும் அழிந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இவ்விசாரணையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக இரகசியக் காவல்துறையினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment