அ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

Facebook Cover V02

AIADMK-office-in-Cbeஎத்தனையோ மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், மாறுபட்ட கோணங்கள் நிறைந்ததுதான் தமிழக அரசியல். ஆனால் கருணாநிதி மரணத்திற்கு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு உரிய மரியாதை அளித்த பாங்கு மதிக்கத்தக்கது, போற்றத்தக்கது.

கருணாநிதியின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோபாலபுரத்தில் ,உள்ள அவரது வீட்டுக்கே சென்று துணை முதல்வரும் மற்றும் அமைச்சர்களும் நலம் விசாரித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் கூறித்து கேட்டறிந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அரசியல் நாகரீகமாக பேசபட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். தமிழகம் முழ்வது ஆங்காங்கே கருணாநிதி படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

கோவை மாவட்டம் கள்ளிமடையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜிஆர் இளைஞர் அணி அலுவலகத்தில் வைத்து, கருணாநிதி அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்து, கருப்பு சட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இது குறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் செர்ந்த எம்.எல்.ஏ., ஆறுகுட்டி இதில் தவறு ஏதும் இல்லை என கூறி உள்ளார்.

Share This Post

Post Comment