காபூலில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

kapulஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷாஸ்தாரக் பகுதியில்   இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. இதில் பலியானோர் என்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 3 நிருபர்கள், ஒரு போட்டோகிராபர் உள்ளிட்டோரும் பலியாகி உள்ளனர். பத்திரிக்கையாளர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பைக்கில் வந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.





Related News

  • இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு பாகிஸ்தான் நடவடிக்கை
  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
  • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
  • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
  • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
  • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
  • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
  • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *