ஆர்.கே.நகர் வேட்பாளர் யார்? அ.தி.மு.க., நாளை முடிவு

admk_Logoஆர்.கே.நகர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.,வில், வேட்பாளர் தேர்வை, ஆட்சி மன்ற குழு தான் முடிவு செய்யும். ஜெ., இருந்த போது, ஆட்சி மன்ற குழுவில், ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருந்தனர்.

அவர்களில், ஜெ.,யும், விசாலாட்சியும் தற்போது இல்லை. அவருக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை காலை, 11:30 மணிக்கு, சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில், உட்கட்சி பிரச்னைகள் ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், ஜெ., முதலாம் ஆண்டு நினைவு தினம், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா, ஆட்சி மன்ற குழு மாற்றம், ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தற்போது, எந்த கட்சியும் இல்லாமல் உள்ளார். அவர், மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.

சென்னையில், நேற்று தன் ஆதரவாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். பின், ‘மீண்டும், 29ம் தேதிகூடி, வேட்பாளர் பெயரை அறிவிப்போம்’ என, தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.






Related News

  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *