தமிழ் மக்களுக்கு அடேல் பாலசிங்கத்தின் அவசர அறிவிப்பு!

ekuruvi-aiya8-X3

Adel-Balasingam-300x200தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தி தம்மிடம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அத்தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், அதனை நம்பவேண்டாம் எனவும் தமிழீழ மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் அஸ்தி அவரின் விருப்பப்படியே மிகவும் இயற்கையான சூழலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும், குறித்த அமைப்பினர் பிரித்தானியாவில் அவருக்கு கல்லறை கட்டுவதற்கு பரிந்துரைப்பது அவரது சிந்தனைகளைக் கேலிக்கூத்தாக்குவதற்குச் சமன் எனவும் தனக்கு இவர்களின் செயற்பாடுகள் மன உளைச்சலைத் தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கடினமாக உழைத்து வழங்கிய பணத்தினை உயிரற்ற உறைந்துபோன கற்களில் செலவளிக்காது அவதியுறும் தமிழீழ மக்களின் தேவைகளுக்காகவும் அவர்களின் வாழ்வுக்காகவும் செலவளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Adel-Balasingam-press-1 Adel-Balasingam-3

Share This Post

Post Comment