ஜேர்மனியில் அடை மழை: சுரங்கவழி பாதைகளில் வெள்ளம்

Facebook Cover V02

berllin-720x450ஜேர்மனியில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக பெய்யும் அடை மழை காரணமாக, தலைநகர் பேர்லினில் உள்ள சுரங்கவழிப் பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சுரங்கவழி பாதைகளின் படிக்கட்டுகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வீதிகளிலும் சுரங்கவழி பாதைகளிலும் நிரம்பி வழியும் நீரை திசைதிருப்பும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். கடும் மழை காரணமாக வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கடும் மழையுடனான காலநிலை, குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment