ரெயில்களில் ஏ.சி. டிக்கெட் கட்டணம் உயர்கிறது

Facebook Cover V02

train_0806நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி விதிப்பு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பு முறையால் வரி ஏய்ப்பு தடுக்கப்படுவதுடன் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஆடம்பர மற்றும் கேளிக்கை போன்றவற்றுக்கான வரி விதிப்பு காரணமாக அவற்றின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வேயில் ஏ.சி. வகுப்பு கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால் ஏ.சி. வகுப்பு கட்டணங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அதிகரிக்கிறது.

ஏ.சி. வகுப்புக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் ஜூலை 1-ந்தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரக்கு ரெயில்களில் சரக்குகளுக்கு 4.50 சதவீத வரி விதிப்பு அமலில் உள்ளது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் அதைவிட கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏ.சி. அல்லாத மற்ற வகுப்பு கட்டணங்கள், தூங்கும் வகுப்பு கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றம் இல்லை என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment