83ஆண்டு கலவரம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிவடைந்துவிட்டன – அரசாங்கம்!

Thermo-Care-Heating

Black-July-1983-VNS5001983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின்போது இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், சொத்துக்களை இழந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 1983ஆம் ஆண்டு கலவரத்தின் போது காயமடைந்த மக்களின் எண்ணிக்கைஇ பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எத்தனை? இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

நேற்றைய அமர்வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் வருகை தராத காரணத்தினால், ஊடகத் துறை அமைச்சரான கயந்த கருணாதிலக இதற்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜூலைக் கலவரம் தொடர்பான ஆவணங்களை காவல்துறை மா அதிபர் கோரியிருந்தார். இருப்பினும் ஆறு காரணங்களினால் ஜூலைக் கலவரத்தின்போதான ஆவணங்கள் அனைத்தும் அழிவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்று 33 வருடங்கள் கடந்துவிட்டதால் ஆவணங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. அத்துடன் காவல்துறையிப் பிரிவின் பி 8 இன் பிரகாரம் அழிக்கப்பட்டிருத்தல், சுனாமி அனர்த்தம், வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களினால் அழிவடைதல் அல்லது யுத்தத்தினால் அழிவடைந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment