450 கோடிஆசைப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்ட ஒஸாமா பின்லேடன்

oshamaபாகிஸ்தானில் அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தார் என அண்மையில் வெளியான புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலனாய்வுச் செய்தியாளரான ஸீமோர் ஹெர்ஷ் எழுதிய கில்லிங் ஆஃப் ஒசாமா பின்லேடன் என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. இப்புத்தகத்திலேய இந்தச் சம்பவம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அப்போட்டாபாதில் பின்லேடனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தான் உளவு அமைப்புத்தான்.

ஒசாமாவின் இருப்பிடத்தை அறிவதற்காக ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு கையூட்டுக் கொடுத்து அவர் இருக்கும் இடத்தை அறிந்து, இரகசியமாக அவரை அப்போட்டாபாத்துக்கு நகர்த்தியுள்ளனர்.

அடுத்த கட்டமாக அவரை கண்காணிப்பதற்கு இலகுவாக ஐ.எஸ்.ஐ. பயிற்சி மையம், இராணுவ பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள கட்டடத்துக்கு ஒசாமா நகர்த்தப்பட்டார்.

(ஒசாமா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்திலேயே இவ்வளவு விடயங்களும் மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்டது.)

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இராணுவ மருத்துவரான அமீர் அஜீஸை பின்லேடன் குடியிருப்புக்கு அருகே ஐ.எஸ்.ஐ. அமைப்பு தங்க வைத்தது.

அமீர் அஜீஸ் அனுப்பிவைத்த மரபணுமாதிரியை உறுதிப்படுத்திய அமெரிக்கா அந்தக் கட்டடத்தில் தங்கியிருப்பது ஒசாமாபின்லேடன்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

பின்லேடன் குறித்து தகவல் அளிப்பவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சுமார் 450 கோடி இலங்கை ரூபாயை அமெரிக்கா அமீர் அஜீஸ் இற்கு வழங்கியது.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, தாலிபான்களின் தயவு தேவை என்று ஐ.எஸ்.ஐ. கருதியது. ஆகையால் ஒசாமா தங்களின் பிடியில் உள்ளதை ஐ.எஸ்.ஐ. புலனாய்வு அமைப்பு அமெரிக்காவுக்கு மறைத்துள்ளது.

ஆனால், பின்லேடனின் தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த 2.5கோடி டொலர் தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி பின்லேடன் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டார்.

இதன்பின் அமெரிக்கப் புலனாய்வாளர்களால் புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு, 2011ஆம் ஆண்டு பின்லேடன் அமெரிக்க சீல் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த முடிவு ஏற்கனவே பாகிஸ்தான் இராணுவத்துக்கு தெரியும் என பலர் கருதுகின்றனர். அதனால்தான், பாகிஸ்தான் போர் விமானங்களைப் பற்றி கவலைப்படாமல், அதிரடிப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் விமானங்களின் பாதுகாப்பு இல்லாமல், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் எளிதில் நுழைந்து பின்லேடன் தங்கியிருந்த இல்லத்தில் அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்த வகையில், பின்லேடன் கொல்லப்பட்டதை திட்டமிடப்பட்ட படுகொலை என்றே சொல்லலாம் என அந்தப் புத்தகத்தில் ஸீமோர் ஹெர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.


Related News

 • இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு பாகிஸ்தான் நடவடிக்கை
 • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
 • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
 • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
 • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *