இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1200 அரிதான நட்சத்திர ஆமைகள்

ekuruvi-aiya8-X3

tortoiseஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1200 அரிதான நட்சத்திர ஆமைகள் கற்பிட்டி – தில்லடிய கடற்கரை பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தடைசெய்யப்பட்ட இரசாயன திரவியமான கிளைபோசெட் 100 கிராம் அளவான 5400 சிறு பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நட்சத்திர ஆமைகளும் இரசாயனமும் இந்தியாவிலிருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைதுசெய்ய கற்பிட்டி காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This Post

Post Comment