நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

Thermo-Care-Heating

governor-vidyasagarதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை அவசர ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல, நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்

ideal-image

Share This Post

Post Comment