ஆளுநர் ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது: சசிகலா

ekuruvi-aiya8-X3

sasikala098இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் ஆளுநர் காப்பார் என்று நம்புவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சிக்குள் உட்கட்சி விவகாரம் தற்போது வெடித்து பூதாகரமாக கிளம்பி வருகிறது. பன்னீர் செல்வம் தரப்பினர் அவரது இல்லத்தில் இருந்தும், சசிகலா தரப்பினர் போயஸ் கார்டனிலும் பரபரப்பாக பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பொதுச் செயலாளர் சசிகலா பேசினார்.

அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் ஆளுநர் காப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ”அதிமுகவிற்கு தோல்வி என்பதே இல்லை, அரசை நிச்சயம் காப்பாற்றுவோம். அனைவருடைய ஒத்துழைப்போடு மென்மேலும் இந்த இயக்கம் வளரும்.

ஜனநாயகத்தையும் ஆளுநர் காப்பார் என்று நம்புகிறோம், பொறுத்து இருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

Share This Post

Post Comment