ஆளுநர் மாளிகைக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Facebook Cover V02

raj-bavan-police-protectionஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்படலாம் என்பதால் ராஜ்பவனில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சசிகலா இன்று முதல்வராக பதவியேற்கப்படலாம் என தகவல் தெரிவித்த நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவ் தமிழகம் வராமல் மும்பை சென்றதால் பதவியேற்பு விழா நடைபெறாது என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்படலாம் என கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜ்பவன் முன் தடுப்பு வேலி அமைத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சசிகலா பதவியேற்பு விழா நடைப்பெறுவதாக இருந்த சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த போலீஸ் கூடுதல் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, ராஜ்பவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment