‘மக்களை கட்டிப்போடும் டிஜிட்டல் சங்கிலி ஆதார்’

ekuruvi-aiya8-X3

digit_aadhar‘ஆதாரை கட்டாயமாக்குவது, மக்களை டிஜிட்டல் சங்கிலியால் கட்டிப்போடுவதை போன்றது’ என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, மனுதாரரின் வழக்கறிஞர் ஆவேசமாக வாதிட்டார்.

நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு ஆதார் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் அனைத்து நலத்திட்டங்களின் பயன்களை பெற, ஆதார் கட்டாய மாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆதாரால், தனி நபர் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், ஆதர்ஷ் குமார் சிக்ரி, சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷ்யாம் திவான் கூறியதாவது: மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம், ஒரு நாட்டு அரசியல் சாசனமாக மாற்றப்பட்டு வருகிறது. அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு வரும் ஆதார், மக்களின் சிவில் உரிமைகளை மரணிக்கச் செய்வதாக அமையக்கூடும். ஆதாரை கட்டாயமாக்குவது, மக்களை டிஜிட்டல் சங்கிலியால் கட்டிப்போடுவதை போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment