எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தில் நாடுகடத்தலை எதிர்பார்த்திருக்கும் ரோமா குடும்பம்

ekuruvi-aiya8-X3

கனடாவில் தங்கியிருப்பதற்காக 17  வயதான Gilda உம்  அவரது தாயான Katalin Lakatos  உம், கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொண்ட போராட்டம், எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்கள்  என்ற செய்தியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஐரோப்பாவில் ரோமா இனத்தவருக்கு எதிரான திட்டமிட்ட, பரந்துபட்ட இனவாத செயற்பாடுகளின் காரணமாக 2011 ஆம் ஆண்டு தொடக்கம் தாங்கள் கனடாவில் தங்கி இருப்பதாக Lakatos குடும்பத்தினர்  கூறுகின்றனர். கடந்த மே மாதத்தில் அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தனர். ஆயினும் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் “வழமைக்கு மாறான சூழ்நிலைகள்” காரணமாக அவர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கான தற்காலிக வதிவிட அந்தஸ்தை வழங்கியிருந்தார்.

நாடுகடத்தல் தீர்ப்பை அறிந்ததும் மிகவும் மனம் கலங்கியவராகக் காணப்பட்ட Gilda Lakatos, தாம் மீண்டும் ஹங்கேரி நாட்டுகு திருப்பி அனுப்பப்படுவதயிட்டு விரக்தியடந்த நிலையில் உள்ளார்.montreal-que-july-27-2016-hoda-asmar-left-of-solida

Share This Post

Post Comment