பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை கொண்டு வர ரொறொன்ரோ மாநகராட்சி முடிவு
Jun 08 2012 06:58:04

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய  குழைமைப்  பைகளை (பிளாஸ்டிக் பை) தடை செய்வது என ரொறொன்ரோ மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த தடை ஜனவரி. 1, 2013 அன்று ரொறொன்ரோ மாநகர் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதன் பின்னர் சில்லறை வணிகர்கள் பொருடகள் வாங்குவோருக்கு அவற்றை ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பாலித்தீன் பைகளில் போட்டுத் தரக் கூடாது என்ற சட்டமும் நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக நேற்று மாநகர அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 24 பேர் மாநகராட்சியின் முடிவை ஆதரித்தும் 20 பேர் இதனை எதிர்த்தும் வாக்களித்த்னர். முன் ஆய்வு மற்றும் ஆலோசனைகள் ஏதுமின்றி சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு திடிரென பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிப்பது என ரொறொன்ரோ மாநகராட்சி எடுத்துள்ள முடிவினை சுற்றுச் சூழல் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் மாநகராட்சியின் இந்த முடிவுக்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை  நாடக் கூடும் எனவும் எதிர்பார்க்கபப்டுகிறது. 

குழைமைப்  பைகளின் மூலம் மட்டுமே மக்களிடமிருந்து கடைக்காரர்களுக்கு $5-மில்லியன் வருமானமாகக் கிடைக்கிறது. இதனை மையமாக வைத்தே சில நிறுவனங்கள் குழைமைப் பைகளை அதிகம் தயாரித்து வருகின்றனர் என நகர் சபை உறுப்பினர் டேவிட் ஷிநேர் குற்றஞ்சாட்டினார். குழைமைப் பைகளினால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களுக்கு ஒவ்வாமை நோயும் உருவாகிறது என்பதாலே இந்த முடிவு எடுக்கப்பப்பட்டுள்ளது என மாநகராட்சி கூட்டத்தில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

 
Jun 20 2013 00:52:35 [Canada]
டொரண்டோவின் லிபரல் கட்சி எம்.பி Bob Rae இன்று திடீரென தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும், மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.35 ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்த Bob Rae, இன்று Parliament Hill

Read More >

Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை

Read More >

Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்

Read More >

Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >