ஒன்றாரியோவில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி உதவித் தொகை தவறாக பயன்படுத்தப்படுகின்றது?
May 21 2012 08:03:13
ஒன்ரோறியோவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுமானால் அவை பெரும்பாலும் வேறு செலவீனங்களுக்கே மாணவ சமுதாயத்தால் பயன்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பல மாணவர்களிடம் கருத்துக் கேட்ட போது கல்வி உதவித் தொகையைக் கொண்டு விலையுயர்ந்த குளிர்கால ஆடைகளை வாங்கவுள்ளதாக சிலர் கூறினர்.
இந்த தொகை கடனாகவே மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்ற போதிலும் கூட அவற்றைப் பற்றி கவலைப்படாமல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதனை செலவழிப்பதை பல மாணவர்கள் பெருமையாகவே கருதுகின்றனர். இந்த வருடம் அளிக்கப்படவுள்ள கல்வி உதவித் தொகையைக் கொண்டு நியூயார்க் நகரை சுற்றிப் பார்க்க விரும்புவதாக மாணவர் ஒருவர் கூறுகிறார். கடனாகவே இந்த தொகை தனக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியும் என்ற போதிலும் கூட இளமைக் காலங்களில் தான் விரும்புவதை செய்ய வேண்டும் என்பதினாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சில மாணவர்கள் வட்டியில்லாமல் கிடைக்கும் இந்த கடன்தொகையை தங்கள் செலவுகளுக்காக பயன்படுத்தினால் பாடசாலை படிப்பினை முடிக்கும் வரை பகுதி நேர வேலைகளுக்குச் செல்வதை தவிர்க்க முடியும் எனவும் கூறுகின்றனர். ஒட்டு மொத்தமாக இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது மேல்படிப்புக்களுக்காக அரசு கொடுக்கவுள்ள இந்த உதவித்தொகையை பெரும்பான்மையான மாணவர்கள் படிப்பிற்காக செலவிடப் போவதில்லை என்பது உறுதியாகிறது.
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை
Read More >
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >