பாடசாலை மாணவர்களுக்கான பொருடகள் விற்பனை இந்த வருடம் உச்சம் தொடக் கூடும் என எதிர்பார்ப்பு
Aug 10 2012 07:31:07
கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் முதல் பாடசாலைகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதால் கனடிய பெற்றோர்களும் , சிறுவர்களும் ஷூ, மடிக்கணினி , எழுது பொருடகள் , புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கும் முனைப்பில் இருக்கின்றனர். இதனால் பாடசாலைச் சிறுவர்களுக்கான பொருடகள் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் விற்பனை சற்று அதிகமாக இருக்குமே தவிர அபார விற்பனைக்கு சாத்தியமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
கனடிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கிடையே நிலவி வரும் கடுமையான போட்டியே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதைய விற்பனை நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் 2.5 சதவீதம் விற்பனை அதிகமாகக் கூடும் என்கிறது Ernst & Young. பெருகி வரும் மக்கள் தொகை , பணவீக்கம் ஆகியவற்றை காரணங்களாகவும் சுட்டிக் காட்டுகிறார் இந்நிறுவனத் தலைவர் டேனியல் பயர்.
அதே நேரத்தில் கடந்த காலங்களில் அதிகமாகச் செல்வழித்து கடனில் மூழ்கியுள்ள கனடிய குடும்பங்களும் அதிகம் என்பதால் இதனை பாடமாக எடுத்துக் கொண்டே மக்கள் தரப்பினரில் பலர் அதிகம் செலவு செய்யத் தயங்கி வருகின்றனர் என்பதும் இகுருவி நடத்திய சிறிய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >
May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்
Read More >
May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து
Read More >
May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்
Read More >
May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு
Read More >
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Read More >
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக
Read More >