ஒன்டாறியோ தமிழ் ஆசிரியர் சங்க பரிசளிப்பு விழா
Jul 20 2012 09:08:19
ஒன்டாறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்டாறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியது. போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 17ம் தேதியன்று ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழித் திறன் காணல் போட்டியில் இவ்வருடம் ஒன்டாறியோ கல்விச் சபைகளில் கல்வி கற்கும் சுமார் 1800 மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள், 90 புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புப் பரிசு பெற்றிருந்தனர். தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட பல முக்கிய பிரமுகர்களும், தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் டொறன்டோ கல்விச்சபையிலிருந்தும், ஏனைய கல்விச் சபைகளில் இருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்திருந்தனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டதுடன் நிகழ்ச்சியின் இடையே ஆசிரியர், மாணவர் கலந்து கொண்ட கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப் பண், அமைதி வணக்கம் ஆகியன இடம் பெற்றன. குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவர்கள் பங்கு பற்றிய வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத்தின் உபதலைவர் பொன்னையா விவேகானந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து சுசீலா ராஜகுலேந்திரன் மாணவர்கள் பங்கேற்ற அபிநயப்பாடலும், தொடர்ந்து உஷா லெட்சுமணன் மாணவர்களின் அபிநயப்பாடலும் இடம் பெற்றன. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டொறன்டோ கல்விச் சபையைச் சேர்ந்த ஜொலி யங், சரோ ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதைத் தொடர்ந்து ஒன்டாறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவரது தலைமை உரையில் இனிவரும் காலங்களில் ஆசிரியர், மாணவர், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் ஒன்றுகூடலுடலான விளையாட்டு போட்டிகள் நடத்த சங்கம் ஆலோசித்திருப்பதாகவும், தமிழ் பெற்றோர்களின் நேரடி ஆலோசனையைப் பெறுவதற்கான பெற்றோர் சங்கம் ஒன்றை அமைத்துச் செயற்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பத்மராணி பஞ்சாட்சரம் மாணவர்களின் பல்லிசை நடனம் இடம் பெற்றது. அடுத்து பாக்கியா விஜயராஜாவின் ஆக்கத்தில் அவரது மாணவர்கள் பங்கேற்ற வழிகாட்டி என்ற நாடகம் இடம் பெற்றது. நகுலா ரெஜினோல்ட்டின் மாணவர்கள் பங்குபற்றிய மாணவன் நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் கௌசல்யா தர்மலிங்கத்தின் நன்றியுரையுடன் பரிசளிப்பு விழா இனிதே முடிவுற்றது.
- குரு அரவிந்தன்
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை
Read More >
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >