ஒன்ரோறியோ என்.டி பி மாகாணத் தலைமைப் பதவியில் கனடியத் தமிழர் நீதன் ஷான்; வாழ்த்துக்கள் நீதன் ஷான்!
Apr 15 2012 08:12:35

ஒன்ரோறியோ என்.டி பி மாகாணத் தலைமைப் பதவி நீதன் ஷான் என்ற கனடியத் தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ட்ரியூ மச்கென்சியை காட்டிலும் அதிகமான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அண்ட்ரியூ மச்கென்சி சாதாரண நபரல்ல. கட்சியில் மிகவும் பலம் வாய்ந்த தொழிலாளர் சங்கத் தலைவராக செயலாற்றியவர் என்பதோடு என்.டி.பி கட்சியில்  பலரின் அபிமானத்தையும் பெற்றவர். 

இருப்பினும் நீதன் ஷானே மாகாணத் தலைமைப் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வெத் குழுவினர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த முனைப்போடு செயலாற்றி வந்தனர். சிறுபான்மையினரையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே அதிகாரங்களைக் கைப்பற்ற முடியும் என்ற முடிவிற்கு என்.டி.பி கட்சியைச் சேர்ந்த பலர் வந்து விட்டனர் என்பதையே இந்த முடிவு தெளிவாகக் காட்டுகிறது. 

மரபு ரீதியான கொள்கைகளை மட்டுமே என்.டி.பி கட்சி தொடர்ந்தும் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றும் வண்ணம் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி நேற்று ஹமில்டனில் நடைபெற்ற என்.டி.பி மாநாட்டில் அண்ட்ரியா ஹோர்வெத் வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதற்கு கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட அதை அண்ட்ரியா ஹோர்வெத் குழுவினர் துளியளவும் கண்டு கொள்ளவில்லை.



 

 
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:50:46 [Canada]
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்

Read More >

Jun 17 2013 09:38:10 [Canada]
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >

Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்

Read More >

Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்

Read More >

Jun 16 2013 10:15:59 [Canada]
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே

Read More >

Jun 15 2013 20:32:09 [Canada]
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

Read More >