ஒன்ரோறியோ ஆசிரியர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை சட்டமாக்க முடியாமல் திணறுகிறார் மக்கென்றி
Aug 11 2012 09:10:52

 ஒன்ரோறியோ ஆசிரியர் மீதான புதிய ஊதிய ஒப்பந்த நெறிமுறைகளை அமுல்படுத்த முடியாத சூழல் மக்கென்றி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  மக்கென்றி தலைமையிலான அரசு சிறுபான்மை அரசு என்பதால் இதனை நிறைவேற்ற ஒன்ரோறியோ எதிர்க்கட்சிகளின் தயவினை வேண்டி நிற்கிறார் முதல்வர். 

 
தற்போதைய நிலவரங்களின் படி அரசின் ஆசிரியர்களுக்கான புதிய ஒப்பந்த நெறிமுறைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்காததால் இந்த விடயத்தில் தனக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதை முதல்வர் மக்கென்றி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 
 
இது தொடர்பாக பலமுறை ஆசிரியர் ஒன்றியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் எந்த சுமூக முடிவையும் அரசால் எடுக்க முடியவில்லை என்றும், உண்மையில் கோன்செர்வேற்றிவ் உள்ளிட்ட பிற கட்சிகள் கொண்டிருந்த ஊதிய ஒப்பந்தத்தினை விட சிறப்பான ஒன்றையே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அரசு எடுத்துள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இதற்கு கிடைக்காத சூழல் உண்டாகியுள்ளதால் சிறுபான்மை அரசான தங்களால் இதனை நிறைவேற்ற முடியாமல் உள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது எனவும் மக்கென்றி விவரித்துள்ளார்.  
 
இந்நிலையில் தற்போது விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் செப்ரெம்பர் 1 முதல் பணிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படுமானால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்

Read More >

May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்

Read More >

May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்

Read More >

May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்

Read More >

May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read More >

May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,

Read More >

May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >