பொப் ரே லிபரல் கட்சியின் நிரந்தர தலைவராக்கப்படுவாரா?
Jun 08 2012 06:51:24
லிபரல் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் தற்போதைய இடைக்காலத் தலைவர் பதவி வகித்து வரும் பொப் ரேவும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என இது வரையிலும் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு விடை கிடைக்கும் சூழல் உண்டாகியுள்ளது. இதற்கான முறைப்படியான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் கூட நிரந்தரத் தலைவர் தேர்தலில் பொப் ரேயையும் சேர்த்துக் கொள்வதென நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
லிபரல் நிர்வாக சபையின் பெயர் வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் மூலம் இது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே லிபரல் கட்சியின் இயக்குனர்களுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளில் பொப் ரேயை ஆதரிப்பது போன்ற சூழல் அதிகரித்துள்ளதையும் உறுப்பினர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே இது போன்ற சர்ச்சைகள் வெடித்த போது, நிரந்தர தலைவர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் ஏதும் தனக்கில்லை என பொப் ரே கூறியிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி பொப் ரே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை நிர்வாகிகள் நிறுத்த விரும்பவில்லை எனவும் ஆனால் அவரின் கடந்த கால சாதனைகளை வைத்து அவரை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமா , இல்லையா என்பதை உறுப்பினர்களே முடிவு செய்ய வேண்டும் எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >