சர்ச்சைக்குள்ளான அகதிகள் குடிவரவு சட்ட மூலத்தில் மாற்றம் - எதிர்கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தார் கென்னி
May 10 2012 05:50:08

பெரிய கப்பல்கள் மற்றும் படகுகளில் கூட்டமாக நாட்டிற்குள் வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த புதிய C-31 சட்டமூலம் ஒன்றினை கடந்த மாதம் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி அறிவித்திருந்தார்.  புதிய சட்டங்களின் படி கூட்டமாக வருபவர்களின் அகதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்றும் அவர்கள் கனடிய சிறைகளில் தள்ளப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை என்.டி.பி, லிபரல் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், கனடிய மக்களும் கடுமையாக எதிர்த்தனர்.

மக்கள் பலரும் இந்த சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த மாற்றங்களின் படி இனி மொத்தமாக கனடாவிற்குள் வரும் அகதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாலும் அவர்களின் கோரிக்கை மனுக்க்களை 14 நாட்களில் குடிவரவுத் துறை பரிசீலிக்கத் தொடங்கும். ஆறு மாதங்களுக்குள் அரசின் பரிசீலனைகள் முடிவுக்கு வரும் எனவும் தெரிய வருகிறது.  இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கப்பல்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான தமிழ் அகதி மக்களின் கோரிக்கைகளும் இது போன்றே பரிசீலிக்கப்பட்டு நல்லதொரு முடிவு காணப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது மட்டுமன்றி அகதிகளாக நாட்டினுள் வந்து நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை திரும்பப் பெற குடிவரவுத் துறையினால் முடியாது எனவும் C-31 சட்டமூல மாற்றங்களில் கூறப்பட்டுள்ளது. போலியாக குடியுரிமை பெற்றவர்களை மட்டுமே அரசினால் தண்டிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

புதிய மாற்றங்களுக்குப் பின்னர் கொடுக்கப்பட்டுள்ள 14 நாட்கள் கால வரையறை மிகக் குறுகியது எனவும் இதற்குள்ளாக அகதியாக வந்த ஒருவர் அவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவது சிரமம் என்பதால் இந்த கால வரையறை நீடிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்.

 
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை

Read More >

Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்

Read More >

Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >