சிறிலங்காவையே ஆதரிப்போம்- ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இந்தியாவின் பிரகடனம்!
Mar 13 2012 08:40:58

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசை இந்தியா முழுமையாக ஆதரிக்கும் என்றும், அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை இந்தியா ஒருபொதும் ஆதரிக்காது என்பது உறுதியாகி விட்டது. இதை இன்று இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.

சிறிலங்கா சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என கூறிய ஜெயலலிதாவும், சென்னை மெரினா கடற்கரையில் 3மணி நேர உண்ணாவிரத  நாடகத்தை நடத்திய கருணாநிதியும், ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு குரல் கொடுப்பதாக நாடகம் ஆடிய போதிலும் பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பார் மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்கள்.  பணத்திற்காக மார்அடிக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டமும் வெறும் கண்டன அறிக்கைகளுடன் ஓய்ந்து விடுவார்கள்.

இன்று மக்களவை கூடியதும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைத்தனர்.  அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இதற்கு மேலும் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.

பிரணாபின் இந்த விளக்கம், இந்தியாவின் நிலை என்ன, மன்மோகன் சிங் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. நிச்சயமாக இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்காது என்பது அம்பலமாகி விட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?  தமிழகமோ, இந்தியாவோ ஈழத்தமிழர்களுக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி- தினக்கதிர்

 
Jul 12 2012 05:42:36 [India]
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் ஆவி உலவுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது

Read More >

Jun 27 2012 06:32:17 [India]
பிளாஸ்ரிக் மண்ணை மாசுபடுத்தும் மிகக் கொடிய நச்சுப் பொருள் என உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வரும் வேளையில் இந்தியாவின்

Read More >

Jun 13 2012 19:58:07 [India]
தலைமறைவாகி கர்நாடக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றில் சரணடைந்தார். சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்

Read More >

Jun 05 2012 20:19:35 [India]
அகோர வெய்யிலினால் ஆந்திர மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 148 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரி த்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36

Read More >

May 31 2012 06:39:43 [India]
உலக செஸ் போட்டியில் இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந் இம்முறையும் சாம்பியன் பட்டத் தினை வென்றுள்ளார். ஏற்கனவே 2000, 2007, 2008, 2010 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் சாம்பியனாக வந்த இவர் இம்முறை

Read More >

May 23 2012 07:11:21 [India]
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் அதிகாரி யாக செயல்படவிருக்கும் ராஜ்யசபா செகரட்டரி

Read More >

May 01 2012 15:09:17 [India]
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பல குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான, பற்றுக்களைத் துறக்காத இளவயதினரான நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் அனைத்தும் அதிருப்தியும், ஆத்திரமும்

Read More >

Apr 03 2012 07:00:06 [India]
தமிழகத்தில் 60,000 வருட பழமையான மனிதன் ! இந்தியா என்னும் துணைக் கண்டத் தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை

Read More >

Apr 01 2012 04:36:29 [India]
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

Read More >

Mar 19 2012 11:02:54 [India]
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்றும் அதைப் படித்து விட்டு ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More >