'EI திட்டங்களின் புதிய மாற்றங்களை ஹார்ப்பர் அரசு மீளப்பெற வேண்டும்'- பொப் ரே
May 30 2012 07:11:48
தேசிய அளவில் திடமானதொரு கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் வேலைக் காப்புறுதி திட்டங்களில் புதிய மாறுதல்களை புகுத்த ஹார்ப்பர் அரசு முயற்சிக்கக் கூடாது எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாறுதல்களை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும் என லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொப் ரே நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசின் புதிய அறிவிப்பால் பருவகாலச் செய்கைப்பாடு குறித்த பணிகளைச் செய்து வருவோர் கடுமையாக பாதிக்கப்பட நேரும் எனவும் அனைத்து பருவங்களிலும் இவர்கள் பணி புரிவதும் பணிகளை மாற்றிக் கொள்வதும் இயலாத ஒன்று எனவும் பொப் ரே விளங்கப்படுத்தியுள்ளார்.
எனவே இது போன்ற பணியாளர்களுக்கு வேலைக் காப்புறுதி திட்டங்களை அரசு ரத்து செய்யும் பட்சத்தில் அவர்கள் தாங்கள் வசிக்கும் மாகாணத்தின் நலத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுமேயொழிய இருக்கும் பணிகளை அனைவரும் புரிய முன்வர வேண்டும் என்ற அரசின் கனவு நனவாகாது எனவும் தெரிவித்துள்ளார்.
வேலைக் காப்புறுதி குறித்தான அரசின் புதிய திட்ட மாறுதல்களில் எதிர்க்கட்சிகள் எப்போதும் மாற்றுக் கருத்துடன் இருப்பதை சுட்டிக் காட்டிய பொப் ரே, மக்களின் அனைத்து ஐயங்களையும் களைந்து விட்டு கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர் இதனை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்
Read More >
May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்
Read More >
May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்
Read More >
May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்
Read More >
May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Read More >
May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,
Read More >
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >