கனடிய பூர்வ தேச குடிமக்களின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷான் அற்லியோ
Jul 19 2012 09:16:49
கனடிய பூர்வ தேச குடிமக்களுக்கான தலைவர் குறித்து கடந்த சில நாட்களாகவே பலவேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வந்ததால் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று ரொறொன்ரோவில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோரின் ஆதரவினைப் பெற்று ஷான் அற்லியோ மீண்டும் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஷான் அற்லியோ பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் கனடிய பூர்வ தேச குடிமக்களுக்கான உரிமையை பெற்றுத் தர கோன்செர்வேற்றிவ் அரசை எதிர்த்து போராட மாட்டார் உள்ளிட்ட பல்வேறு புரளிகள் கிளப்பப்பட்ட போதிலும் கூட அவை ஏதும் எடுபடவில்லை என்பதையே நேற்றைய வாக்கெடுப்பின் மூலம் உணர முடிந்தது.
இந்த வாக்கெடுப்பில் கனடிய பூர்வ தேசத்து பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மூன்று கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்றாம் கட்ட முடிவில் ஷான் அற்லியோ தன்னை எதிர்த்து களம் இறங்கியவர்களைக் காட்டிலும் 67 சதவீத வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஒட்டு மொத்தமாக கனடிய பூர்வ தேச குடிமக்களின் தேசிய தலைவருக்கான போட்டியில் 8 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கனடா பூர்வீக குடி நாடுகள் அனைத்திற்குமான சட்டமன்றத் தலைவராக ஷான் அற்லியோ பதவி வகிக்க உள்ளார் என்பதும் அந்தந்த பகுதிகளின் தலைவர்கள் இவருடன் இணைந்து செயல்படுவர் என்பதும் தெரிய வந்துள்ளது. கல்வி உட்பட பூர்வ தேசக் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேவைப்படும் அனைத்து வளங்களையும் , உரிமைகளையும் கனடிய அரசுடன் பேசி பெற்றுத் தருவதே ஷான் அற்லியோவின் கடமை.
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >
May 17 2013 09:23:12 [Canada]
ஒன்றோரியோவின் அனைத்து நகரப்புறப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தொட்டியில் போடும் போது தெள்ளத் தெளிவான பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்
Read More >