சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு மொன்றியலில் பல்லாயிரக்கனக்கனோர் பேரணி!
Apr 23 2012 07:14:12

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு அண்ணளவாக் 250,000 மக்கள் பங்குகொண்ட பிரமாண்ட பேரணி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கியூபெக் நகர்புற பகுதியில் தொடங்கிய இந்த பேரணி மவுண்ட் ரோயலில் நேற்று பிற்பகலில் நிறைவு செய்யப்பட்டது. ஒற்றுமையுடன் மக்கள் அனைவரும் அணிவகுத்து வந்த காட்சி அனைவரையு  ஈர்த்தது. கடந்த சில நாட்களாகவே மாணவர் ஆர்ப்பாட்டங்களால் கலவர பூமியாக மாறிய மொன்றியல் நேற்றைய பிரமாண்ட பேரணிக்குப் பின்னர் ஒற்றுமையை பறைசாற்றும் நகராக மாறியுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பல வகையான  உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமியை, பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால் 1970ல், இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது "எர்த் டே' 175க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல், எரிமலை வெடித்தல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம், பூமியின் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தான்.

அதிகரிக்கும் வெப்பநிலை: தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால் ஓசோன் பாதிக்கப்படுகிறது. வெப்பநிலை மற்றும் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் காற்று, நீர் மாசுபடுகிறது. அதிக மழை அல்லது வறட்சி என இயற்கை சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தடுக்கும் வழிகள்: ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். "புளோரெசன்ட்' பல்பினை பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது "பாலிதீன்' பயன்படுத்துவதை, முடிந்தவரை குறைக்க வேண்டும். குறைந்த தூரம் செல்ல மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள், தேவையான மின் சக்தியை காற்றாலைகள் மூலம் பெறலாம். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சுழல் தொடர்பான பாடங்களை சேர்த்து, வருங்கால சந்ததியினர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம்.

 

 
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >

May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,

Read More >

May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்

Read More >

May 23 2013 09:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது

Read More >

May 22 2013 08:22:32 [Canada]
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மல்லிகைப் பூவில் இருப்பது வெறும் மணம் மட்டுமல்ல. பல்வேறு

Read More >

May 22 2013 08:16:13 [Canada]
செனட்டர் மைக் டபி பதவி விலகிய பின்னரும் கூட அவர் தொடர்பான விவகாரங்களிலும், ஆளும் கோன்செர்வேற்றிவ் அரசின் ஊழல்களையும் எதிர்கட்சிகள் பிரதானப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Read More >

May 22 2013 08:09:06 [Canada]
அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில்

Read More >

May 22 2013 07:59:25 [Canada]
கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும்

Read More >

May 22 2013 07:44:05 [Canada]
பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது.

Read More >